நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கிண்ண கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

சிவிதாஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ரோபர்ட் லெவண்டோஸ்கி, பெலிக்ஸ், லோபஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் கெல்தா விகோ, அல்மேரியா, ராயோ வலாகனோ ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset