செய்திகள் கலைகள்
“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
சென்னை:
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், பாலாஜி கேசவன் இயக்கத்தில் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
T Creations M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா எனப் பல பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளைத் தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ராவுடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஓர் இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்துத் தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன்.
நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய,எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 10:39 am
நடிகர் தனுஷின் 50ஆவது படம் ராயன்: முதல் சிங்கள் மே 9ஆம் தேதி வெளியாகிறது
May 7, 2024, 10:38 am
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கைவிடப்படுகிறதா? படக்குழுவினர் விளக்கம்
May 7, 2024, 7:16 am
Laapataa Ladies திரை விமர்சனம்
May 6, 2024, 3:34 pm
எனது இசை நிகழ்ச்சி அனைவருக்குமானது: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்
May 5, 2024, 11:53 am
ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சிக்கு மலேசியாவைச் சேர்ந்த அருளினி தேர்வு
May 3, 2024, 2:10 pm
பையா திரைப்படத்தையடுத்து அயன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்கிறார் டிஎஸ்ஜி
May 3, 2024, 11:46 am
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
May 2, 2024, 5:16 am
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
April 30, 2024, 4:31 pm