நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘You touch you go', மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வியமைச்சர் கண்டனம் 

ஷா ஆலம்: 

மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வீட்டிற்குப் பின் பள்ளிகளைப் பாதுகாப்பான இடமாக இருப்பதை கல்வியமைச்சு உறுதி செய்யும் என்றார் அவர். 

குறிப்பாக ஒரு மாணவரின் எதிர்காலத்தை அழிக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து விடுப்படும் இடமாகப் பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்றார் அவர். 

பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய மாநாட்டில் ‘You touch you go' என்று அமைச்சர் கூறினார். 

துன்புறுத்தல் பிரச்சனை உண்மையில் சுகாதார அமைச்சகத்திற்கு நெருக்கமானது என்றும், மத நிறுவனங்களில் மாணவர்களை ஈடுபடுத்திய பாதிக்கப்பட்டவர்களை அவரே சந்தித்ததாகவும் ஃபட்லினா கூறினார்.

பாலியல் துன்புறுத்தல் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லையென்று தாம் கேட்டதற்கு மற்றவர்களிடம் இது குறித்து சொன்னால் கற்ற அறிவு பயன்படாது என்றும் கற்றுக் கொடுப்பவர்களின் தன்மானத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபட்லினா ஓர் ஆர்வலராக இருந்தபோது சரவாக்கில் 20 குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் துன்புறுத்தல் வழக்கை கையாண்டா போது மாணவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

பெண் மாணவர்களை மட்டுமல்ல, ஆண் மாணவர்களையும் பாதுகாக்கும் பணியானது சவால் மிகுந்தது என்று அவர் கூறினார்.

சிறப்பு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாலியல் துன்புறுத்தல் இல்லாத சூழலை வழங்குவதை உள்ளடக்கிய பாதுகாப்பான பள்ளி திட்டத்தைக் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது என்றார் அவர்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நாங்கள் செய்யும் விளையாட்டுப் பின்னணியில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

 இதனால் விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாள்வதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியமைச்சு கவுன்சிலர்களை நியமிக்கவுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset