
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம்: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுரை:
கரூர் கோயிலில் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் இடையே திருமணம் செய்து வைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரூர் பஞ்சமாதேவி புதூர் ஸ்ரீ ஆனூர் அம்மன் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பரம்பரை அறங்காவலர் ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் பஞ்சமாதேவி புதூரில் அருள்மிகு ஆனூர் அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் அடுத்த வாரம் அரச மரம், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைக்க நாள் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணத்துக்கு தடை விதித்தும், பழனிச்சாமியின் ஸ்ரீஆனூர் அம்மன், ஸ்ரீ முனியப்பசாமி அறக்கட்டளை பதிவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "ஆனூர் அம்மன் கோயிலில் அரசு மற்றும் வேம்பு மரங்களுக்கு அடுத்த வாரம் நடைபெறும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
அதற்கு மனுதாரர் இரு காரணங்களை சொல்கிறார். அரச மரத்தை ஆணாகவும், வேப்ப மரத்தை பெண்ணாகவும் கருதுகின்றனர்.
வேப்பம் மரம் அரச மரத்தை விட வயது முதிர்ந்தது. இதனால் இந்த திருமணம் நடைபெறக்கூடாது என்கிறார்.
மற்றொன்று மரங்களுக்கு திருமணம் நடைபெறும் நாள் நல்ல நாளில்லை, அதனால் அன்று திருமணம் நடைபெறக்கூடாது எனக் கூறியுள்ளார்.
மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது புனிதமானதாக நான் கருதுகிறேன். நிகழ்வுடன் தொடர்புடைய பக்தி மற்றும் மதத்தை மறந்துவிடுவோம். ஆனால் மரங்கள் இயற்கையின் ஒரு அங்கம், மரங்கள் இல்லாவிட்டால் ஒரு நொடி கூட நம்மால் இருக்க முடியாது. பீட்டர் வோல்பென் என்பவர் மரங்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை? மரங்கள் என்ன உணர்வுகின்றன? மரங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன? என்பது குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அதில் மரங்களுக்கிடையிலான காதல் மற்றும் இனச் சேர்க்கைக்கான தனி அத்தியாயம் உள்ளது.
மரங்களுக்கான திருமணத்தை மரங்களின் வயது வித்தியாசத்தை காரணமாக கூறி தடுக்க முயல்வதை ஏற்க முடியாது. வயது வித்தியாசம் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிப்பது காலாவதியான அணுகுமுறை.
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மனைவி அவரை விட 6 வயது மூத்தவர். மரங்களின் திருமணம் நடைபெற தேர்வு செய்யப்பட்டுள்ள நாள் நல்ல நாளில்லை என்கிறார் மனுதாரர்.
நீதிமன்றம் எல்லா விஷயங்களிலும் தலையிட முடியாது. இதனால் 18.3.2024 முதல் 20.3.2014 வரையில் நடைபெறும் ஏழு திங்கள் சீர் விழாவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
- கி. மகாராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm