நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெர்லி தான் - தீனா சீன இணையை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர் 

பெட்டாலிங் ஜெயா:

அகில இங்கிலாந்து பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றில் தேசிய மகளிர் இரட்டையர்  பெர்லி தான் - தீனா இணை உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் சீனாவின் சென் கிங் சென்-ஜியா யி ஃபேன் இணையைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர். 

பிர்மிங்காமின் யுத்திலித்தா அரங்கில் நடந்த ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பெர்லி தான்-தீனா 22-20, 21-16 என்ற செட் கணக்கில் குயிங் சென்-யி ஃபேனை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர். 

இதற்கு முன் ஐந்து முறை சீனா ஜோடியைக் களத்தில் சந்தித்திருந்தால் பெர்லி தான்-தீனா அவர்களை வீழ்த்தியது இதுவே முதல் முறை. 

இருப்பினும், இப்போட்டியில் சீன இணையின் யி ஃபேனுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. இது தங்களின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்திருப்பதாகவும் பெர்லி தான் தெரிவித்தார். 

காலிறுதி சுற்றில் பெர்லி தான்-தீனா இணை ஜப்பானிய ஜோடியான ரெனா மியாவுரா-அயாகோ சகுராமோத்தா இணையைச் சந்திக்கவுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset