நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் சம்பளம் பெறாததால்  22,826.65 வெள்ளி சேமிக்கப்படுகிறது: ஸலிஹா 

கோலாலம்பூர்:

பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் வரை சம்பளம் வாங்க மறுத்ததைத் தொடர்ந்து அரசாங்கம் மாதம் 22,826.65 ரிங்கிட் சேமிக்கின்றது.

இந்தத் தொகையானது பிரதமரின் அடிப்படை சம்பளத்தை ஒதுக்குவதற்கான அரசாங்கத்தின் செலவின சேமிப்பின் ஒரு பகுதியென்று பிரதமத் துறையின் கூட்டரசு அமைச்சர் ஸலிஹா முஸ்தாப்பா கூறினார். 

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்டதிலிருந்து அவர் சம்பளம் வாங்கவில்லை என்று ஸலிஹா கூறினார்.

அரசாங்கத்தின் சேமிப்பு தொகை பற்றி அறிய விரும்பிய அஹ்மத் ஃபட்லி ஷாரியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலில் ஸலிஹா இவ்வாறு தெரிவித்தார். 

24 நவம்பர் 2022 அன்று பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு, பிரதமரின் சம்பளக் குறைப்பு அவரது முதல் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

அவரது தலைமையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முதல் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரது அமைச்சர்கள் அந்தந்த சம்பளத்தில் 20 சதவீதத்தைக் குறைத்தனர்.

- அஸ்வினி செந்தாமரை 
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset