நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தையில் உணவுகளின் விலை உயர்வா? தேர்வு மக்கள் கையிலுள்ளது: அர்மிசான்

கோலாலம்பூர்:

ரமலான் சந்தையில் நியாயமான விலையில் விற்கப்படும் உணவுப் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் அர்மிசான் முகமது அலி அறிவுறுத்தினார்.

தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TTDI) ரமலான் சந்தையில் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது குறித்துத் தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு நடத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் கரிப்பாப் பலகாரம் அதிக விலையில் விற்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இருப்பினும், அங்குப் பல கடைகளில் உணவுப் பொருட்கள் நியாமான விலையில் விற்கப்படுவதால் பொது மக்கள் அங்குத் தங்களுக்குத் தேவையான உணவுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

சில விற்பனையாளர்கள் பொருட்களின் விலையை உயர்த்துவதைக் கண்டறிந்த பின்னர், நாடு முழுவதும் உள்ள ரமலான் சந்தைகளில் ஓப்ஸ் பந்தாவ் நடவடிக்கையின் தற்போதிய நிலை என்ன அமினோல்ஹூடா ஹசானின் கேள்விக்கு அர்மிசான் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கிடையில், பொதுமக்கள் இது குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம்.

பொருட்களின் விலையை பரப்புவதை விட நடவடிக்கை சிறந்தது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset