நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அமர்ந்திருந்த ரசிகரை எழுந்து ஆடச்சொன்ன பிரபலப் பாடகி மடோனா: உண்மை அறிந்து ரசிகரிடம் மன்னிப்புக் கேட்டார் 

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் (Los Angeles) நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மடோனா, கூட்டத்தில் ஒருவரைப் பார்த்து "ஏன் அமர்ந்திருக்கிறீர்கள்?" என்று கேட்பதைக் காட்டும் காணொலி X சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.

65 வயது மடோனா, ரசிகரின் அருகில் சென்றபோதுதான் அவர் சக்கர வண்டியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். உடனே "என்னை மன்னித்துவிடுங்கள்! நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. மடோனாவுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் எழுந்தன.

இசைநிகழ்ச்சியில் அமர்ந்திருப்பதில் என்ன தவறு? என்று சிலர் கேள்வி கேட்டனர்.

அமர்வதோ நிற்பதோ அவரவர் விருப்பம். அதில் என்ன பிரச்சினை இருக்கிறது? பணம் செலுத்தி நுழைவுச்சீட்டை வாங்கி நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்? அது போதாதா? என்று மற்றொருவர் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

"அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து நீங்கள் வெளியில் போகச்சொல்ல முடியாது.  மடோனா ஒன்றும் இங்கிலாந்து ராணி அல்ல. சிலருக்கு அசதியாக இருக்கலாம் அல்லது அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதற்காக அவர்கள் வெளியே போகவேண்டுமா? என்று மற்றொருவர் குமுறலை வெளியிட்டார்.

TikTok இல் அந்தக் காணொலி 3.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மடோனாவின் இசைநிகழ்ச்சிப் பயணம் கடந்த ஆண்டு (2023) அக்டோபரில் தொடங்கியது; அது இந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி மெக்சிக்கோ நகரில் முடிவடையும்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset