நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெர்மனியில் ரமலான்: பிரதமர் பங்கேற்கிறார் 

பெர்லின்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜெர்மனியில் ரமலான் நோன்பு மாதத்தை வரவேற்கவுள்ளார்.

பிரதமருடன் ஜெர்மனியில் வசிக்கும் 5.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இணைந்து நோன்பை வரவேற்க தயாராகவுள்ளனர்.

ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பிரதமர் நேற்று இரவு ஜெர்மனியின் பெர்லினுக்கு சென்றடைந்தார்.

இப்பயணத்தில் போது  ரமலான் தொடர்பான பல நிகழ்ச்சிகளிலும்  அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்தோருடன் பிரதமர் சந்திப்பு நடத்தவுள்ளார்.

அவர்களுடன் இணைந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்வார் என்று ஜெர்மனிக்கான மலேசியத் தூதர் டத்தின் படுகா டாக்டர் அடினா கமருடின் தெரிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெர்லினில் படிப்பைத் தொடரும் 1,060 மாணவர்களைத் தவிர, நாட்டில் வசிக்கும் சுமார் 1,800 மலேசியர்கள் மலேசியத் தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset