நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாகிஸ்தான் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்தது தவறில்லை: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

அரசின் முடிவுகளை விமர்சிக்க இந்தியர்களுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பேராசிரியர் ஜாவீத் அகமது தனது வாட்ஸ்அப்பில்,  ஆகஸ்ட் 5ம் தேதி கருப்புத் தினம் என்றும் ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் சுதந்திரதின வாழ்த்துகள் என்றும் பதிவிட்டிருந்தார்.

அவர் மீது வகுப்புவாத வேறுபாட்டை தூண்டுதல் பிரிவின் கீழ் மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தயப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க நீதிபதிகள், அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)ஏ வின் கீழ் பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது.

அதன்படி, அரசின் அனைத்து முடிவுகளையும் விமர்சிக்க உரிமை உள்ளது.  பிற நாடுகளின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இதில் எந்த தவறும் இல்லை.  

அரசின் முடிவுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஒவ்வொருவரின் மீது வழக்குப் பதிவு செய்தால் ஜனநாயகம் தழைக்காது என்று கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset