நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் நன்கொடைப் பத்திரங்களின் விவரங்களை வெளியிட மறுப்பு தெரிவிக்கும் எஸ்பிஐ மீது வழக்கு

புது டெல்லி:

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ)  மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

சுமார் 80 சதவீதம் தேர்தல் நன்கொடைகள் பெயர்கள் தெரியாதவர்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது ஏடிஆர் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கூடுதல் கால அவகாசம் கோரிய எஸ்பிஐ}யின் மனு விசாரணைக்காக வரும் 11ஆம் தேதியில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் சேர்த்து  அவமதிப்பு மனுவையும் விசாரிக்க வேண்டும்' என்று கோரினார்.

இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறும், அதனடிப்படையில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பத்திரங்களாக பெறுவது சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றம் அதை அண்மையில் ரத்து செய்தது. இதன் விவரங்களை எஸ்பிஐ மார்ச் 6ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset