நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாசார் போரோங்கில் வேலை செய்து வந்த தமிழ் பேசும் 12 வயது சிறுவன் மீட்பு

கோலாலம்பூர்:

கடந்த இரண்டு மாதங்களாக  கோலாலம்பூர் பாசார் போரோங்கில் பணிபுரிந்து வந்த 12 வயது புலம்பெயர்ந்த சிறுவன் மீட்கப்பட்டான்.

சம்பந்தப்பட்ட சிறுவனக்கு தமிழ் மட்டுமே பேசத் தெரிகிறது என்று கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமது சௌஃபி வான் யூசுப் கூறினார்.

சந்தையில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் காய்கறிகள், மீன்களை லோரியில் ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்டோம்.

தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த சிறுவன், இரண்டு மாதங்களுக்கு முன்பு மியான்மாரில் உள்ள தனது குடும்பத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வாழ்வாதாரத்திற்காக வழிதவறி மலேசியாவிற்குள் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்.

தன்னிடம் பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்ததாக நம்புவதாக அவர் கூறினார்.

தாய்லாந்து ஒரு முகவருக்கு சுமார்  9,000 ரிங்கிட் செலுத்திய பிறகு, அவர் நாட்டில் பயணம் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் தேவையான ஆவணங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக ஒரு நாளைக்கு 40 ரிங்கிட் சம்பளத்திற்கு நான் இங்கு வேலை செய்து வருகிறேன் என அச்சிறுவன் கூறியதாக வான் முகமது சௌஃபி வான் யூசுப் கூறினார்.

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் மீட்கப்பட்ட அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset