நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஸ்டேட் வங்கியின் வாதம் படு கேவலமானது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

மதுரை: 

தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 4) கோரிக்கை விடுத்தது.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியது:
நானும் 20 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றியுள்ளேன். இவ்வளவு கேவலமான வாதத்தை நீதிமன்றத்தில் இவ்வளவு பெரிய வங்கி வைத்துள்ளது. 

இந்த தகவலை 2 நிமிடங்களில் கொடுத்துவிட முடியும். ஒரு வங்கியை நடத்த ரிசர்வ் வங்கி அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் அடிப்படை தொழில்நுட்ப வசதிகள் இருக்க வேண்டும். 

உலக பொருளாதாரத்தில் 5-வது நாடு எனக் கூறப்படும் நிலையில், அந்த நாட்டின் பெரிய வங்கியால் சிறிய தகவலைகூட அளிக்க முடியவில்லை என்பதை கேட்கவே நடுங்குகிறது. 

வங்கி நடைமுறைகள் ஒழுங்காக இல்லையா என்ற பயம் எழுகிறது. நாளை காலையே தரவுகளை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வங்கித் தொழிலில் இருக்கக் கூடாது.” எனத் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset