நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிவகங்கையில் தினகரனின் அமமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது 

சிவகங்கை: 

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் குக்கர் சின்னத்துடன் கூடிய பேனர்களை சுவர்களில் ஒட்டி அமமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது.

மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பாஜக கூட்டணியில் அமமுக சேர வாய்ப்புள்ளதால், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட தேர்போகி பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றார். இது 11.3 சதவீதம். இதனால் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அமமுக கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்குள் 2 முறை சிவகங்கை மாவட்டத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன், தான் இந்த முறை போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

அமமுக சார்பில் டி.டி.வி. தினகரன் தான் போட்டியிட போவதாகவும், இல்லாவிட்டால் கடந்த முறை போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி நிறுத்தப்படலாம் என்றும் அக் கட்சியினர் கூறி வருகின்றனர்.

ஆனால் பாஜக வலுவாக உள்ள 9 தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று என்று அவர்கள் கூறி வருகிறார்கள். அதனால் இந்த தொகுதியை விட்டு கொடுக்க மாட்டோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் தேவகோட்டை பகுதியில் குக்கர் சின்னத்துடன் பேனர்களை சுவர்களில் ஒட்டி அமமு கவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset