
செய்திகள் கலைகள்
பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் KL Kaingeh மலேசிய பாடல்
கோலாலம்பூர்:
Samba Rock இசையில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் மலேசிய கலைஞர் நந்தகுமார் கணேசன் வெளியிட்டுள்ள KL Kaingeh எனும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
நந்தகுமார் சொந்தமாக எழுதி பாடிய இப்பாடல் thr raaga-வின் 10 சிறந்த மலேசிய பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இப்பாடல் மூன்று மாதங்களாக raaga வானொலியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
மக்களின் வாக்களிப்பு மூலம் வானொலிக்கு தேர்வு செய்யப்படும் பாடல்களில் தனது பாடல் இடம் பெற்றிருப்பது பெருமையளிப்பதாக நந்தகுமார் கூறினார்.
KL இளைஞர்கள் தொடர்பான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனது சொந்த YouTube channel-லான vetri tamilan records-சில் இப்பாடலை மக்கள் கேட்டு ரசிக்கலாம்.
இப்பாடலின் காணொலி அனைத்தும் கோலாலம்பூரில் படம் பிடிக்கப்பட்டது. இதில் guitarist loges தம்முடன் இணைந்து நடித்திருப்பார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இசை துறையில் காலடி எடுத்து வைத்து 2022ஆம் ஆண்டு தைப்பூசத்திற்கு வேலா வடிவேலவா என்ற பாடல் வெளியிடப்பட்டது.
அப்பாடலுக்கு கிடைத்த மகத்தான வரவேற்பை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு வேலா என்ற பாடலும் இவ்வாண்டு முருகா வேல் முருகா என்ற பக்தி பாடலும் வெளியிடப்பட்டது.
எவ்வித இசை பின்னணியும் இன்றி, samba rock இசை மீதான அதீத ஆர்வத்தின் மூலம் வளர்ந்து வரும் இளம் கலைஞராக நந்தகுமார் உருவாகி வருகிறார்.
தம்முடைய படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதாக நந்தகுமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 6:22 pm
நடிகை வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தார்
July 14, 2025, 1:09 pm
இந்திய திரையுலகின் பிரபல பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
July 12, 2025, 8:14 pm
வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm