நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியப் பூப்பந்தின் எதிர்க்காலம் கவலையளிக்கும் நிலையில் உள்ளது: லீ சோங் வேய்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் பூப்பந்து விளையாட்டை காப்பாற்ற கடுமையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நாட்டின் முன்னாள் பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வேய் தெரிவித்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய அணி பூப்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மலேசியா 0-3 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியடைந்தது பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் போட்டியில் இரண்டாவது அணியை மட்டுமே களமிறக்கினாலும் உலக ஜாம்பவான் என்ற அந்தஸ்தை சீனா நிரூபித்துள்ளது.

மலேசியா காலிறுதியில் வெளியேறியது.

இந்த முறை ஆசிய அணி பூப்பந்து சாம்பியன்ஷிப்  போட்டியானது பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தரவரிசைப் புள்ளிகளை வழங்குகிறது.

மலேசியப் பூப்பந்து அணியின் செயல்திறன் தனக்கு வேதனையளிப்பதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் மலேசியப் பூப்பந்து அணி வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று அவர் கூறினார். மேலும், நாட்டின் பூப்பந்து அணியின் நிலையைக் கண்டு தாம் விரக்தியடைவதாகவும் அவர் தெரிவித்தார். 

டத்தோ லீ சோங் வேய் நாட்டைப் பிரதிநித்து ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தேசியப் பூப்பந்து அணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நாம் கடுமையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இல்லையெனில், நாம் மிகவும் பின்தங்கியிருப்போம்.

இனி இந்த நாட்டில் பூப்பந்து முக்கிய விளையாட்டாக இருக்காது. அந்த நிலை வரக் கூடாது என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset