நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேசக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாது: ஃபஹ்மி

புத்ராஜெயா: 

நாட்டில் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய  எந்த விதமான சிறப்பு நிதி எதுவும் வழங்கப்படாது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் கலைஞர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் அவர்களுக்காக எந்தவொரு நிதியையும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஒதுக்கப்படவில்லை என்று அதன் அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கூறினார். 

தற்போதைக்கு ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சியை நடத்த அவர்களின் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்கான நடவடிக்கைக்குத் தமது அமைச்சகம் முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் கூறினார். 

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு, ஆசியாவின் சில பகுதிகளில் இசை நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் கோலாலம்பூரில் மட்டும் அரசு நிதியுதவியின்றி நடத்தினார்கள்.

அதுதான் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் அடையாளமாக ஏற்பாட்டாளர்களின் முயற்சியாகும். அமைச்சகம் உரிய நிதியை வழங்கவில்லை.

சிங்கப்பூர் போன்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு இந்த நிதியை வழங்க நினைத்தால், அது சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உட்பட்டது.

விண்ணப்ப முகவர் குழுவின் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவது, படமெடுப்பது மற்றும் வெளிநாட்டு கலைஞர்களை நிகழ்த்துவது போன்றவற்றை அமைச்சகம் கருதுகிறது.

இதற்கு முன்னர் அனுமதி பெறுவதற்கு நீண்ட நாளாகும். தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset