நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது; அடுத்த பொதுத் தேர்தலுக்கு காத்திருக்கலாம்: பெர்சத்து

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு புதிய கதையை உருவாக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தலாம் என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் ரஃபிக் அப்துல்லாஹ் கூறினார்.

கடந்த காலங்களில் இருந்து பாஸ் இஸ்லாமியக் கட்சி என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் அதிகாரத்தை வெல்வதற்கான நம்பிக்கையில் பாஸ் உள்ளது என்று அக்கட்சியின் சிலாங்கூர் மாநில தகவல் பிரிவுத் தலைவர் ஸூர்க் அஹ்மத் கூறினார்.

இதற்கு பதிலளித்த ரபிக், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் எவ்வாறு தோல்வியடைந்துள்ளது என்பதில் தேசியக் கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்.

ஸூர்க்கின் நிலைப்பாட்டை நாம் மதிக்கிறேன். 

அதே வேளையில் சிலாங்கூரில் தேசியக் கூட்டணியின் பிரச்சாரத்திற்கான எந்தவொரு புதிய முடிவும் கூட்டணியின் உயர்மட்ட தலைவர்கள் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

இப்போது நமக்குள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே மிக முக்கியமானது. 

பொருளாதாரம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை, ரிங்கிட் வீழ்ச்சியடைகிறது, விலைவாசி உயர்கிறது.

16ஆவது பொதுத் தேர்தலை பற்றி பேசுவதைவிட நாம் இதில் கவனம் செலுத்தலாம் என்றார் அவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset