நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கள்ளப் பதிப்பு நடவடிக்கை: ஆஸ்ட்ரோ எச்சரிக்கை

கோலாலம்பூர்: 

பதிப்புரிமைப் பெறாத படைப்புகளை வெளியிடும் தரப்பினர்களுக்கு எதிராக ஆஸ்ட்ரோ கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு தலைமை அதிகாரி தாய் காம் லியோங் எச்சரித்துள்ளார்.

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்குச் சாதமான பலன்கள் கிடைத்துள்ளதை ஆஸ்ட்ரோ வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் ரசிகர்களுக்கு உள்ளடக்கங்களை வழங்கும் தங்களின் ஆற்றலை கள்ளப்பதிப்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. 

அதே சமயம், மலேசியர்களுக்காகப் பிரேத்தியேகமான உள்ளடக்கங்களை வழங்குவதற்கு மேலும் முதலீடுகளைச் செய்யும் தங்களின் ஆற்றலையும் சிதைக்கிறது என்று அவர் ஓர் அறிக்கை
வாயிலாகக் கூறினார்.

உணவு மற்றும் பான விற்பனை மையம் மற்றும் கேமரன் மலையிலுள்ள ஆடை ஆபரண ஹோட்டல் ஆகியவற்றுக்கு எதிராக ஆஸ்ட்ரோ தொடுத்த சிவில் வழக்கில் இழப்பீடாக 55,000 வெள்ளியை வழங்க இரு நிறுவனங்களும் இணங்கியதோடு ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோருவதோடு ஆஸ்ட்ரோவின் பதிப்புரிமையை மீறுவதையும் நிறுத்திக் கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர அவ்விரு நிறுவனங்களும் 53,000 வெள்ளி மதிப்புள்ள ஆஸ்ட்ரோ வர்த்தக வாடிக்கையாளராக ஆகவும் இணக்கம் தெரிவித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியின் போது உயர் நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட வரலாற்றுப் பூர்வ தீர்ப்பை முன்மாதிரியாக க் கொண்டு இந்த நிறுவனங்களுக்கு எதிராக ஆஸ்ட்ரே சிவில் வழக்கை தொடுத்தது.

முறையான வர்த்தக லைசென்ஸ் இன்றி ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு உள்பட அங்கீகரிக்கப்படாத வழிகளில் வர்த்தக ஸ்தபானங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset