நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல் தொடர்பு அமைச்சர் செய்தியாளர்களுக்கான புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார்

புத்ராஜெயா:

35 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய நெறிமுறைகளுக்குப் பதிலாக, செய்தியாளர்களுக்கான சமீபத்திய நெறிமுறைகளை இன்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் அறிமுகப்படுத்தினார்.

புதிய நெறிமுறை எட்டு முக்கிய நெறிமுறைகளை உள்ளடக்கியது.

இதில் பத்திரிகையாளர்கள் பொறுப்பானவர்களாகவும், வெளிப்படையானவர்களாகவும், தகவல்களைப் பரப்புவதில் நியாயமானவர்களாகவும், தனிப்பட்ட நலன்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். 

மேலும், அவர்கள் முறையான தகவல்களை வழங்க வேண்டும். அவர்களின் ஆதாரங்களின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

தொடர்ந்து, ஊடகங்களை நிர்வகிக்கும் சட்டங்களைப் புரிந்து கொள்ள கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களின் பத்திரிகை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்திகளைப் புகாரளிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் நெறிமுறைகள் வரையப்பட்டதாக ஃபஹ்மி கூறினார்.

இருப்பினும், எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் தவறான அறிக்கைகளை வெளியிட முழுமையான சுதந்திரம் இல்லை. 

இந்நிலையில் தற்போதுள்ள சட்டங்களே பொது அமைதியைப் பாதுகாக்க போதுமானதாக உள்ளது.

எனவே, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் சட்டபூர்வமான தகவல்களை வெளியிடுவதில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் இன்று நெறிமுறைக் குறியீட்டை அறிமுகப்படுத்தும் போது கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset