நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக கராத்தே சம்மேளனத்தின் போட்டியில் ஷமலாராணிக்கு தங்கப்பதக்கம் 

கோலாலம்பூர்: 

உலக கராத்தே சம்மேளனத்தின் போட்டியில் முதல் நிலை கராத்தே 50 கிலோ எடைக்கு உட்பட்ட பிரிவில் தேசிய கராத்தே வீரங்கனையான சி.ஷாமலாராணி தங்கப்பதக்கம் வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். 

சி.ஷாமலாராணி இறுதி சுற்றில் ஸ்பெயின் நாட்டின் இவா ரோட்ரிகுவேஸ் எனும் வீரங்கனையை வீழ்த்தி 9-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கம் வென்றார். 

தங்கப்பதக்கம் வென்ற சி.ஷாமலாராணிக்கு மலேசிய கராத்தே சம்மேளனம் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை பேஸ்புக் வாயிலாக தெரிவித்துக்கொண்டுள்ளது. 

இவ்வேளையில் மலேசிய இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம், தேசிய விளையாட்டு கழகம், மலேசிய கராத்தே சம்மேளனத்தின் தேசிய தலைவர் என யாவருக்கும் சி.ஷாமலாராணி நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

2024ஆம் ஆண்டு மலேசிய கராத்தே அணிக்கு சிறந்ததொரு தொடக்கமாக அமைந்துள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset