நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கான தடையை அகற்ற வேண்டாம்: பிரெஸ்மா

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள உணவகங்களில் புகைப் பிடிப்பதற்கான தடையை அரசாங்கம் அகற்றக் கூடாது. 

காரணம் இது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கூறினார்.

சுகாதார அமைச்சு சிறப்பு புகைபிடிக்கும் பகுதிகள், குறிப்பாக குறுகிய பகுதிகளில் உணவகங்களில் இடம் ஒதுங்குவதற்கான முன்மொழிவை பிரெஸ்மா ஏற்கவில்லை.

இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சு யூ-டெர்ன் செய்யக் கூடாது.

வாடிக்கையாளர்களை உணவக வளாகத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதிக்காமல் இருப்பது சிறந்த நடவடிக்கை. ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது போன்ற நடவடிக்கைகள் நல்ல சூழலைக் கெடுக்கும்.

ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமல்ல, சுற்றுச்சூழலும் சுத்தமாக இருக்கும்.

இந்த நடவடிக்கை சுகாதார அமைச்சு ஏன் பரிசீலிக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை. 

முன்பு மூன்று மீட்டர் தூரம் இருந்தது. இந்த முறை உணவு வளாகம் குறுகிய பகுதியில் இருந்தாலும் அங்கு அனுமதி தர அமைச்சு பரிசீலிப்பதாக கருத்து வெளியாகியுள்ளது.

மக்களுக்கு நல்லது என்னவென்றால் உணவகங்களில் புகைபிடிப்பதை அனுமதிக்கக் கூடாது. ஒரு தீமையிலிருந்து இப்போது தான் சிறிது சிறிதாக வெளியில் வந்திருக்கிறோம். மீண்டும் ஆரோக்கியமற்ற செயல் புரிய அமைச்சு தூண்டக்கூடாது.

உணவக உரிமையாளர்களும் சுத்தமான 
சூழலுடன் வசதியாக இருக்க விரும்புகிறோம். 

அதிகாரத்தில் உள்ளவர்கள் சீராக இருக்க வேண்டும். இதில் அடிக்கடி கொள்கை மாறக் கூடாது என்று அவர் கூறினார்.

முன்னதாக  குறுகிய பகுதிகளில் உள்ள உணவு வளாகங்களுக்கும் புகைப்பிடிக்கும் சிறப்புப் பகுதிகளை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலிக்கும் என சுகாதார அமைச்சரின் செய்தி ஊடகங்களில் வெளியானது தொடர்பில் டத்தோ ஜவஹர் அலி இவ்வாறு தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset