நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

கெனில்வோர்ட் ரோட்  அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லூதோன் டவுன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லூதோன் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இரு கோல்களை அதன் முன்னணி ஆட்டக்காரர்  ராஸ்மோஸ் ஹோஜ்லாவ்ண்ட் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 44 புள்ளிகளுடன் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் பிரிக்டோன் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் சிப்பீல்டு யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset