நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை: முதல்வர் நிதீஷ் குமார்

பாட்னா: 

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தது.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக அந்த ஆட்சியில் பதவி வகித்தார். நிதீஷ் குமார் முதல்வராக இருந்தார்.

"நான் முதல்வராக இருந்தபோதிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்த முறைகேடுகள் தற்போதுதான் தெரியவந்தது' என்று நிதீஷ் குமார் தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவும், அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் எடுத்து முக்கிய முடிவுகளை, தற்போது பாஜக கூட்டணியுடன் அமைந்துள்ள பிகார் அரசு மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிதீஷ் குமார், "கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset