செய்திகள் கலைகள்
மாறுவேடத்தில் மக்களை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, மக்களிடம் நடிகர் விஜய் கருத்து கேட்டு வருகிறார்.
தன் கட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருடன், தொலைபேசியில்அவ்வப்போது விஜய் பேசி வருகிறார்.
இது மட்டுமின்றி, பொது மக்களின் கருத்தை நேரடியாக அறிவதற்கான முயற்சியிலும் அவர் இறங்கிஉள்ளார்.
தற்போது, கோட் படப்பிடிப்புக்காக, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் விஜய் முகாமிட்டுள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் கூடும் பல்வேறு இடங்களுக்கு மாறுவேடம் அணிந்து சென்று, தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, விஜய் கருத்து கேட்டு வருகிறார்.
கட்சியை பலப்படுத்துவதற்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும்; தன்னிடம்மக்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை மறைமுகமாக கேட்டறிந்து வருகிறார்.
இதை, தன் சட்டை பாக்கெட்டில் வைத்துள்ள மொபைல் போனில் ரகசியமாக ஆடியோ பதிவும் செய்து வருகிறார்.
இது போன்ற ரகசிய நடவடிக்கையால், மக்களின் மன நிலையை புரிந்து, அதன்படி நடந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி அறிவிப்புக்கு முன்பாகவும் நடிகர் விஜய், தமிழகத்தின் பல இடங்களிலும் மாறுவேடத்தில் பொதுமக்கள் எண்ணம் அறியும் பணியை செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2024, 3:39 pm
பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் காலமானார்
December 26, 2024, 12:33 pm
உலக செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் குகேஷை நேரில் பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
December 25, 2024, 1:12 pm
ராவணனாக நடிக்க கன்னட நடிகர் யாஷ்ஷுக்கு ரூ.200 கோடி சம்பளம்
December 25, 2024, 11:10 am
தளபதி 69 படத்தின் முதல் பார்வை ஜனவரி 1ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் முடிவு
December 25, 2024, 10:47 am
சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்
December 22, 2024, 3:30 pm