நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அண்டர்டேக்கர் இமேஜை ஒரே நொடியில்  காலி செய்த ரொனால்டோ

ரியாத்:

சவூதி அரேபியா நாட்டில் 2024 ரியாத் தொடர் கிண்ண எனும் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு மல்யுத்த ஜாம்பவான் அண்டர்டேக்கரை அழைத்து வரப்பட்டார். 

அவருக்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அண்டர்டேக்கர் எனும் பிம்பத்தை ஒரே நொடியில் காலி செய்தார் உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

சவூதி அரேபியா நாட்டின் அல் நாசர் கால்பந்து அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சில ஆண்டுகளாக ஆடி வருகிறார். 

அவரது வருகைக்கு பின் சவூதி அரேபியாவில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. 

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சவூதி அரேபியாவின் உள்ளூர் தொடர்களை பார்க்கப் துவங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் போட்டிக்கு முன் அண்டர்டேக்கரை வைத்து கிண்ணத்தை அறிமுகம் செய்தனர் போட்டி ஏற்பட்டாளர்கள். 

அதே போல் கிண்ணத்தை அறிமுகம் செய்தார் அண்டர்டேக்கர். சாதாரணமாக இல்லாமல் மல்யுத்த போட்டிகளில் வருவது போலவே கருப்பு கோட் அணிந்து, அண்டர்டேக்கருக்கு என ஒலிக்கப்படும் இசையுடன் அவர் உள்ளே வந்தார். 

இரு அணி வீரர்களும் இரண்டு பக்கமும் நின்று இருந்தனர். 

அவர்கள் முன் தனக்கே உரிய கம்பீரத்துடன் அண்டர்டேக்கர் கிண்ணத்தை தூக்கி அறிமுகம் செய்தார். 

அப்போது ரொனால்டோ அருகே நின்ற வீரரிடம் ஏதோ சொல்லி அண்டர்டேக்கரை பார்த்து சிரித்தார்.

அந்த வீடியோ உலகம் முழுவதும் வேகமாக பரவியது. 

சிலர் ரொனால்டோ அண்டர்டேக்கரை பார்த்து ரொனால்டோ ஆச்சரியப்பட்டு சிரித்தார் என கூறினாலும், பலரும் ரொனால்டோ அவரது பில்டப்பை பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டார் எனக் கூறி உள்ளனர். 

பல கோடி கொடுத்து அழைத்து வரப்பட்ட அண்டர்டேக்கரை ஒரே நொடியில் சிரித்து காலி செய்து விட்டார் ரொனால்டோ.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset