நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னணி 

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இதுவரை 68 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவித்துள்ளது.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 24 இடங்களிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 22 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது

ஆட்சியில் உள்ள ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிந்த 15 மணி நேரங்களாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத தேர்தல் ஆணையம் பிடிஐ உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பிறகு வேகமாக முடிவுகளை அறிவித்து வருகிறது.

பாகிஸ்தானில் 265 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற 133 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset