செய்திகள் தமிழ் தொடர்புகள்
மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை கட்டாயம் திமுக எங்களுக்கு ஒதுக்க வேண்டும்: எம்.எச். ஜவாஹிருல்லா
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. எனவே, காந்தியடிகள் கனவு கண்ட இந்தியாவை மீண்டும் அமைக்க பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்படுவதற்கு அனைத்து வகையிலும், அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக பாடுபடுவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு தொகுதியை கட்டாயம் திமுக எங்களுக்கு ஒதுக்க வேண்டும்
மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியை கட்டாயம் திமுக எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது. இதுதொடர்பாக திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்கு போட்டியிட்டாலும், அதில் வெற்றி வாய்ப்பு உள்ளது.
தமிழ் பேசத் தெரியாத வட இந்தியர்கள்:
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கிகள், தபால் நிலையங்கள், ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் போன்ற அரசுத் துறை சார்ந்த நிறுவனங்களில் தமிழ் பேசத் தெரியாத வட இந்தியர்கள் பணியில் அமர்த்துவது அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டும் என இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

உபா சட்ட திருத்தங்கள்:
உபா சட்டம் அட்டவணை 4ல் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி எந்த ஒரு நபரையும், நிறுவனத்தையும் இந்தியப் புலனாய்வுத் துறை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதியாகச் சித்தரிக்க முடியும். தனி நபரை ஒரு நீதிமன்றத்தின் தண்டனைக்கு முன்பாகவே பயங்கரவாதி என அழைக்க முடியாது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற அடிப்படை சட்ட விதியைத் தகர்க்கிறது. ஆகவே, உபா சட்ட திருத்தங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் என இப் பொதுக்குழு கோருகின்றது
என்.ஐ.ஏ. அமைப்பு கலைக்கப்பட வேண்டும்:
2019 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசியப் புலனாய்வு அமைப்பின் திருத்தப்பட்ட சட்டம் மூலமாக அசுர பலம் பெற்றிருக்கும் தேசியப் புலனாய்வு முகமை என்னும் என்.ஐ.ஏ. அமைப்பு
எந்த ஒரு மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் மாநில காவல்துறையின் அதிகாரத்தை மீறி சாதாரண வழக்குகளையும் விசாரிக்க முடியும். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் என்.ஐ.ஏ. கலைக்கப்பட வேண்டுமென இப்பொதுக்குழு கோருகின்றது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 4:43 pm
மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கான ஆவணங்கள் இல்லை; அது தீபத் தூண் அல்ல: அரசு தரப்பு
December 17, 2025, 1:15 pm
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: பள்ளிக்கு நாளை விடுமுறை
December 16, 2025, 11:53 am
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
December 15, 2025, 4:12 pm
அமித்ஷா போன்றவர்களுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
December 14, 2025, 7:17 am
UNITED ECONOMIC FORUM - ஐக்கிய பொருளாதார பேரவையின் வர்த்தக மாநாடு
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
