நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவூதி இளவரசர், எகிப்து அதிபருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

ரியாத்:

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து சவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், எகிப்து அதிபர் அல்சிசி ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தூதரக ரீதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

காசா விவகாரம் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பிளிங்கன் மேற்கொள்ளும் 5வது சுற்றுப் பயணம் இதுவாகும்.

ரியாதில் இளவரசர் முஹம்மது பின் சல்மானை பிளிங்கனை சந்தித்துப் பேசினார்.

காசாவில் போர் நிறுத்த பேச்சு வெற்றி பெற்றால், குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை மறுசீரமைப்பது,  தனி பாலஸ்தீன தேசம் அமைப்பது ஆகியவற்றை நோக்கி பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுக் குழுவினர் கூறினர்.

இதனிடையே, காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,585ஆக அதிகரித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset