நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நில உரிமையை மாற்ற 16,000 ரிங்கிட் கையூட்டு: அரசு ஊழியருக்குத் தடுப்புக் காவல்

கோலசிலாங்கூர்:

மாநில நிலத்தைப் பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்க 16,000 ரிங்கிட் கையூட்டு வாங்கியதன் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு அரசு ஊழியர் 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த 40 வயதுடைய பெண் ஊழியரின் தடுப்பு காவல் அவர் கைது செய்யப்பட்டது முதல் அமலுக்கு வருவதாக நீதிபதி சித்தி ஹாஜர் அலி (Siti Hajar Ali) உத்தரவிட்டார்.

கோலா சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் விளக்கம் அளிக்க நேற்று பிற்பகல் 2 மணியளவில் வந்த அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு கையூட்டுப் பணம் சந்தேக நபரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட நிலத்தைப் பிரிப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்த 3 நில உரிமையாளர்களிடம் குற்றம் சாட்டப்பட்டவர் பணம் பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.

இதற்கிடையில் சிலாங்கூர் மாநில எம்ஏசிசி இயக்குநர் டத்தோ அலியாஸ் சலிம், ( Datuk Alias Salim ) இதனை உறுதிப்படுத்தியதோடு எம்ஏசிசி சட்டம் 2009இன் பிரிவு 16 (ஏ) (பி) இன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset