நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உரிமம் இல்லாமல் டீசல் வைத்திருந்த லாரி ஓட்டுநருக்கு 35,000 வெள்ளி அபராதம்

சிரம்பான்: 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் முறையான உரிமம் இல்லாமல் 13,405 லிட்டர் டீசலை வைத்திருந்த லாரி ஓட்டுநர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

33 வயதான எம் ஜெகதீசனிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு நீதிபதி மஸ்னி நவீம் அவருக்கு 35,000 வெள்ளி அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர்  13,405 லிட்டர் கட்டுப்படுத்தப்பட்ட டீசல் வைத்திருந்தார். 

விநியோக கட்டுப்பாட்டு விதிமுறைகள் 1975 இன் 3(1) விதியின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது 

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 11.30 மணியளவில், போர்ட்டிக்சனில், ஜாலான் சிரம்பன் பத்து என்ற இடத்திலுள்ள ஓர் வளாகத்தில் இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் வழங்கல் கட்டுப்பாடு சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் படி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

35,000 வெள்ளி அபராதத்தைக் கட்டத் தவறினால் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset