நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் ஜோர்டான்

டோஹா: 

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு ஜோர்டான் அணியினர் முன்னேறி உள்ளனர்.

அஹ்மத் அலி அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜோர்டான் அணியினர் தென் கொரியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோர்டான் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜோர்டான் அணியின் வெற்றி கோல்களை  யாசான் அல் நைமாட், மூசா அல் தமாரி ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜோர்டான் அணியினர் ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset