நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து ஜாம்பவான் காலித் அலி காலமானார்

பெட்டாலிங் ஜெயா: 

தேசிய கால்பந்து ஜாம்பவான் காலித் அலி தனது 66-ஆவது வயதில் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார்.

அவர் இன்று மதியம் 3.05 மணியளவில் உயிரிழந்ததாக அவரது சகோதரர் ஜைனால் அபிடின் ஹசான் தெரிவித்தார்.

மூச்சுத் திணறல் காரணமாக காலித் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 

முன்னதாக,  காலித் அலிக்கு நான்காம் கட்டப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 

காலித் 1977 முதல் 1985 வரை நாட்டைப் பிரதிநிதித்து விளையாடினார். 

1980-ஆம் ஆண்டு ரஷ்யா மாஸ்கோவில் ஹரிமாவ் மலாயா தகுதி பெற உறுதுணையாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset