நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

யெமேன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அஹ்மெத் அவாத் பின் முபாராக் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்

யேமென்: 

யெமென் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக உள்ள அஹ்மெத் அவாத் பின் முபாராக் அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். மயீன் அப்துல்மலிக்கிற்குப் பதிலாக அஹ்மெத் அவாத் இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

அரேபிய தீபகற்பத்தில் ஹௌதி அமைப்பினருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் தரப்புக்கும் கடும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் யெமெனில் அரசியல் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

யெமேன் நாட்டில் சண்டை கடுமையாக உள்ள நிலையில் இதற்கு முன் இருந்த பிரதமர் அங்கு அமைதியை நிலைநாட்ட தவறிய நிலையில் இந்த புதிய பிரதமர் நியமனம் அரேபிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தைத் தணிய செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset