நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிலியில் காட்டுத் தீ; மரண எண்ணிக்கை 112-ஆக உயர்வு 

சந்தியாகோ:

மத்திய சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. 

மருத்துவக் குழு இதுவரை 112 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாகவும் அவற்றில் 32 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும்  உள்துறை அமைச்சகச் செயலாளர் மானுவல் மான்சால்வ் செய்தியாளர் சந்திப்பில் தெரித்தார்.

நாட்டில் மேலும், 40 பகுதிகளில் தீ ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வால்பரைசோ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 1,600 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

இதுவரை, நாடு முழுவதும் மொத்தம் 161 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன என்று தேசியப் பேரிடர் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் அல்வாரோ ஹார்மசாபல் தெரிவித்தார்.

உள்ளூர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் கடற்கரைப் பகுதியான வினா டெல் மார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

பல பகுதிகளில் இன்னும் தீப்பற்றி எரிவதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலி அதிபர் கேப்ரியல் போரிக் கூறினார். 

மேலும், உயிரிழந்தவர்களை நினைவுக் கூரும் வகையில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் போரிக் அறிவித்துள்ளார்.

பலத்த காற்று காரணமாக காடு மற்றும் நகர்ப்புறங்களில் பரவியக் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

கடந்த இரண்டு நாட்களில், காட்டுத் தீயால் 30,000 முதல் 43,000 ஹெக்டேர் காடுகள் அழிந்தன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset