நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ. 100 வருவாய் ஈட்ட ரூ.98.10 செலவு செய்துள்ளது ரயில்வே

புது டெல்லி:

கடந்த ஆண்டு ரூ. 100 வருவாய் ஈட்ட ரூ. 98.10 ரயில்வே செலவு செய்துள்ளது என இந்திய நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த அவர்,
2022 மார்ச் இறுதி வரையிலான ரயில் வரவு-செலவை ஆய்வு செய்து, அதுதொடர்பான பரிந்துரைகளை சிஏஜி சமர்ப்பித்துள்ளது.

கொரோனா பாதித்த 2021-22 ஆண்டிலும் ரயில்வே கூடுதல் வருவாய் ஈட்டியது. 2020-21இல் ஈட்டிய ரூ. 1,40,783 வருவாயைக் காட்டலும் கூடுதலாக 2021}22}ஆம் ஆண்டில் ரூ. 1,91,367 கோடி வருவாயை ரயில்வே ஈட்டியுள்ளது.

2022-23ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ரூ. 2,40,177 கோடி வருவாயை ரயில்வே ஈட்டியது.
ரூ. 100 வருவாய் ஈட்ட, 2018-19 ரூ. 97.30, 2019-20இல் ரூ. 98.36, 2020-21இல் ரூ. 97.45 அளவிலும், 2021-22இல் வருவாயை விட கூடுதலாக ரூ. 107 அளவிலும், 2022-23 ரூ. 98.10 அளவிலும் ரயில்வே செலவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset