நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சண்டீகர் மேயர் தேர்தலில் பாஜக மோசடி வெற்றி: காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சண்டீகர்:

சண்டீகர் மாநகராட்சி மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கு நடைபெற் ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் மோசடி செய்து இந்தியா கூட்டணியின் காங்கிரஸ், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவகத்தில் போராட்டம் நடத்தினர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி வேட்பாளரும், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

சண்டீகர் மேயர் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி போட்டியிட்டது.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 12 வாக்குகளும் பெற்றதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மாசிஹ் அறிவித்தார். எட்டு வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூத்த துணை மேயர், துணை மேயர் பதவியிடங்களுக்கான தேர்தலை "இந்தியா' கூட்டணி புறக்கணித்த நிலையில், பாஜக வேட்பாளர்கள் குல்ஜித் சாந்து, ராஜீந்தர் சர்மா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பகல் நேரத்திலேயே பாஜகவினர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேயர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட முடிந்த பாஜகவினர், தேசிய அளவிலான தேர்தல்களிலும் எந்த அளவுக்கும் செல்வார்கள் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset