நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சென்னை, பெங்களூரு, மும்பையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை

புது டெல்லி:

சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு உள்பட நாட்டின் 8 நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது,  
அயோத்தி ராமர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதைக் கருத்தில்கொண்டு, அங்கு ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட நாட்டின் 8 நகரங்களில் இருந்து அயோத்திக்கு இருவழி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

"ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்தால் வியாழக்கிழமைமுதல் இயக்கப்படும் இந்தப் புதிய விமான சேவைகளை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைக்க இருக்கிறார்.

சென்னை, மும்பையிலிருந்து தினசரி சேவை: சென்னை, மும்பை நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி இருவழி விமான சேவை செயல்படவுள்ளது.

சென்னையிலிருந்து நண்பகல் 12.40 மணியளவில் புறப்படும் விமானம், அயோத்திக்கு பிற்பகல் 3.15 மணியளவில் சென்றடையும்.

உடனடியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் அந்த விமானம், சென்னைக்கு இரவு 7.20 மணியளவில் வந்து சேரும்.

அதேபோல், ராஜஸ்தானின் ஜெய்பூர், பிகாரின் பாட்னா, தர்பங்கா, கர்நாடகத்தின் பெங்களூரு, தில்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாதிலிருந்து புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாள்களுக்கு அயோத்திக்கு இரு வழி விமான சேவை செயல்பட இருக்கிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset