நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளத்தில் 15, PFI அமைப்பினருக்கு தூக்கு தண்டனை

ஆலப்புழா:

கேரளத்தில் பாஜக மாநில நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில்,  பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு கேரள நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வழக்குரைஞர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், ஆலப்புழாவில் 2021 கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியை (எஸ்டிபிஐ) சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மொத்தம் 15 பேருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது.

அதில், கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக 8 பேர் மீதும், கொலைக்கு உதவியதாக 4 பேர் மீதும், சதித் திட்டம் தீட்டியதாக 3 பேர் மீதும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset