நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி: தென் கொரியா அதிரடி

டோஹா:

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு தென் கொரியா அணியினர் முன்னேறி உள்ளனர்.

எடுகேஷன் சிட்டி அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் தென் கொரியா அணியினர் சவூதி அரேபியா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதனை தொடர்ந்து வெற்றியாளரின் நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது

பெனால்டியில் சிறப்பாக செயல்பட்ட தென் கொரியா அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து தென் கொரியா அணியினர் ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

சவுதி அரேபியா  அணியினர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset