நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் வீரர் ராஸ்போர்ட்டிற்கு அபராதம்

லண்டன்:

இங்கிலாந்து, மென்செஸ்டர் யுனைடெட் வீரர் மார்கஸ் ராஸ்போர்ட்  தமது இரண்டு வார சம்பளத்தை அபராதமாக செலுத்த நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகத்திடம் உண்மையை மறைத்து இரவு விடுதி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதுடன், பயிற்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.

இதனையடுத்து மார்கஸ் ராஸ்போர்ட் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற தகவல் மென்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தனது இரண்டு வார சம்பளமான 650,000 பவுண்டுகள் தொகையை அவர் அபராதமாக செலுத்த நேரிடும் என்று கூறப்படுகிறது. 

உடம்பு சரியில்லை என்று குறிப்பிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவர் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.

குறிப்பாக எஃப்ஏ கிண்ண போட்டியில் நியூபோர்ட் அணிக்கு எதிராக 4-2 கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணி வென்ற ஆட்டத்திலும் மார்கஸ் ராஸ்போர்ட் விளையாடவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset