நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கிலிருந்து கோத்தா கினாபாலு, கூச்சிங் செல்ல நேரடி விமானச் சேவை மீண்டும் செயல்படும் : ஏர் ஆசியா 

கோத்தா கினபாலு:

இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் பினாங்கிலிருந்து கோத்தா கினாபாலு, கூச்சிங் செல்ல நேரடி விமானச் சேவைகளை ஏர் ஆசியா நிறுவனம் மீண்டும் வழங்கவுள்ளது.

தினசரி விமானங்களுக்கான முன்பதிவு இப்போது கூச்சிங்கிலிருந்து பினாங்குக்கு ஒரு வழி பயணச் சேவைக்கு 119 வெள்ளியாகவும் கோத்தா கினாபாலுவிலிருந்து பினாங்குக்கு  ஒரு வழி பயணச் சேவைக்கு 159 வெள்ளியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மார்ச் 31 முதல் நவம்பர் 18 வரையிலான பயணங்களுக்குப் பிப்ரவரி 18 வரை கட்டணக் கழிவுகள் கட்டணங்கள் கிடைக்கும்.

பினாங்கிலிருந்து வரும் பயணிகளுக்கு கூடுதலாக, செபராங் பிராய், கெடா, பெர்லிஸ் மற்றும் பேராக் உள்ளிட்ட தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் கூச்சிங் மற்றும் கோத்தா கினாபாலுவுக்குப் பயணிக்க இந்த வழி வசதியாக இருப்பதாக ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset