நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமானா இக்தியாரின் பிரத்தியேக வகுப்பு திட்டம் மகத்தானது: டத்தோ ரமணன்

கோலாலம்பூர் :

அமானா இக்தியார் மலேசியாவின் பிரத்தியேக வகுப்பு (டியூஷன்) திட்டம் மகத்தானது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுக் கழக துணையமைச்சர் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.

அமானா இக்தியார் தலைமையகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்டேன்.

அப்போது அமானா இக்தியாரில் உள்ள கடனுதவித் திட்டங்கள் குறித்து எனக்கு முழுமையாக விளக்கம் தரப்பட்டது.

குறிப்பாக அமானா இக்தியாரின் வாயிலாக அதிகமான பெண்களே பயன்பெற்றுள்ளர்.

கடனுதவி பெறும் அவர்கள் அதை முறையாக திருப்பி செலுத்துவது தான் அதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

அதே வேளையில் இந்த ஆண்டு இன்னும் அதிகமானோருக்கு கடனுதவிகளை வழங்கவும் அமானா இக்தியார் திட்டமிட்டது.

அதிலும் குறிப்பாக அமானா இக்தியார் தனது உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக சிறப்பு பிரத்தியேக வகுப்புகளை வழங்குகிறது.

மலேசியர்கள் வியாபாரத்துடன் கல்வியிலும் சாதிக்க வேண்டும் என்பது தான் அமானா இக்தியாரின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஆகவே இந்தியர்கள் அமானா இக்தியாரில் உள்ள வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள் அவேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு 2.6 பில்லியன்  ரிங்கிட் நிதியை மொத்தம் 320,000 பங்கேற்பாளர்களுக்கு வழங்கிவதை அமானா இக்தியார் இலக்காக கொண்டுள்ளது.

அதே வேளையில் பிரதமர் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட்டை அமானா இக்தியாருக்காக ஒதுக்கினார்.

ஆகவே இவ்வாண்டு புதியதாக 20,000 உறுப்பினர்களுக்கு அமானா இக்தியார் உதவ முடியும்.

வரும் மார்ச் மாதம் முதல் இந்த கூடுதல் நிதிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று அமானா இக்தியார் தலைமை இயக்குநர் ஷமிர் அஜிஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset