நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வோம் : ஜேம்ஸ் காளிமுத்து

பெட்டாலிங் ஜெயா:

இந்தியர்கள் ஒன்றிணைந்து தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சியில் குலோஇன் எனும் உலகளாவிய தொலைத் தொடர்பு சம்மேளனம் களமிறங்கியுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் காளிமுத்து கூறினார். 

இந்த நவீன வளர்ச்சியில் இந்தியர்கள் குறிப்பாக வர்த்தகர்கள் தங்களின் சுய ஆற்றலை வலுப்படுத்தி கொள்ளும் தலமாக உலகளாவிய இந்தியர் தொழில்முனைவோர் சம்மேளனத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

இந்நிலையில் நடப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை சம்மேளனம் முன்னெடுத்து வருகிறது.

இதில் குறிப்பாக மருத்துவம்-தொழில் கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறை, விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல திட்டங்களும் அடங்கும். 

இதன் வழி இந்தியர் தொழில்முனைவோர் சம்மேளன உறுப்பினர்களின் தொழில் திறன் ஆற்றலை மேம்படுத்தி கொள்ள இது போன்ற திட்டங்கள் பெரும் பங்காற்ற முடியும். 

அதே சமயம் நவீன உலக மையத்தில் உருமாற்றம் கண்டு வரும் வர்த்தக பரிமாற்றங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இளம் தொழில் முனைவர்களை உருவாக்கவும் இது  ஒரு தலமாகவும் அமையும் என்றார் அவர்.

இதற்கிடையே மலேசிய, இந்திய வர்த்தகர்களிடையே புதிய பரிணாமத்தை உருவாக்கும் பொருட்டு அண்மையில் இரு நாட்டின் உலகளாவிய தொலைத் தொடர்பு சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர்களிடையே கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதில்  இந்தியாவில் இருந்து நன்கு அறிமுகமான வர்த்தகரும் தொழில் துறை வல்லுநருமான செல்வ கணேஷ், சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன், கபோங்கான் சத்து மலேசிய தலைவர் ஹாஜி முகமட் நஸ்ரி ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாக கலந்து கொண்டனர். 

இந்த ஒப்பந்தத்தின் வழி பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை போல, இன்று விதைக்கும் பயிர் நாளை விடியலுக்கு உகந்ததாக இருக்கும் என்று ஜேம்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset