நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் கல்வி தரத்தை மேம்படுத்த  நாடாளுமன்றத்தில்  வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: குலசேகரன்

கோலாலம்பூர்:

மலேசியாவின் கல்வி தரம் உலகளாவிய கல்வி தரத்தோடு சிறந்த மதிப்பீடை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கு கல்வி பெரும் பங்காற்றும் சூழலில் மலேசியாவின் கல்வி முறையும் அதுசார்ந்த திட்டமிடல்களும் ஆக்கப்பூர்வமான தரநிலையில் இல்லாதது ஏமாற்றமானது என பிரதமர் துறையின் சட்டத்துறை துணை அமைச்சர் மு.குலசேகரன் தெரிவித்தார்.

மலேசியாவின் கல்வி முறையானது பாடநூல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

இது எந்த நிலையிலும் உலகளாவிய நிலையிலான கல்வி செயல்முறை மற்றும் கல்வி உயரிலைக் கொண்டிருக்கவில்லை.

நாட்டின் கல்வி உருமாற்றங்கள் கூட இதுவரை நல்லதொரு பலனை நமக்கு அளித்ததில்லை என்பதை அன்மைய ஆய்வு ஒன்று நினைவுறுத்தியுள்ளது என்றார்.

மலேசியாவின் கல்வி முறையும் கல்வி தரமும் நமது அண்டை நாடான சிங்கப்பூரை காட்டிலும் பின் தங்கியிருப்பது ஏமாற்றமானது தான் என்பதை மறுப்பதற்கில்லை.

மலேசியாவில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் நாம் இன்னமும் உலக தரத்திலான கல்வி முறைக்கு நம்மை தயார்ப்படுத்தி கொள்ளவில்லை என்பது வருத்தமானது.

கல்வி உருமாற்றம் என்பது திட்டம் அளவில் இருப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.அவை முறையாக நன்கு ஆராயப்பட்டு செயல்படுத்துவதிலும் கல்வி அமைச்சும் அரசும் தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.

நமது அண்டை நாடான சிங்கப்பூர் கணிதம் அறிவியலிலும் வாசிப்பு செயல்முறையிலும் உலகளாவிய நிலையில் 2ஆவது நிலையில் உள்ளது. 

ஆனால்,மலேசியா அவற்றில் முறையாக 48 மற்றும் 57வது தரவரிசை பட்டியலிடப்பட்டிருப்பது மலேசியாவின் ஒட்டுமொத்த கல்வி முறைமீதும் நம் கவனத்தை செலுத்துவதற்கான நினைவுறுத்துலாகவே இது அமைந்துள்ளது.

மலேசியா உலகளாவிய நிலையில் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு சுயாட்சிகுழுவை அமைத்து நல்லதொரு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

இனியும் நாம் பாடநூல்களில் நம்மை சூழ்ந்த விவகாரங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் நமது எதிர்கால மாணவர் சமூகத்திற்கு தேவையானதை கண்டறிந்து கல்வியில் உலகளாவிய நிலையில் சவால் கொண்டு தனித்துவமாய் மிளிரும் நிலையிலான கல்வி திட்டத்தை வரையறுக்க வேண்டும்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மலேசியாவின் கல்வி தரம் 81 நாடுகளில் 51ஆவது இடத்தில் இருப்பது வருத்தமானது என்றும் நாட்டின் கல்வி தரம் குறித்து அரசியல் பிரதிநிதிகள் முதற்கொண்டு நமது பிரதமர் கூட கருத்துரைத்துள்ளார்.

அவசியமாக கவனிக்கப்பட வேண்டிய ஓர் முக்கிய சிக்கலாகவே இது  அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இச்சிக்கல்களுக்கு நல்ல.தீர்வை காண கல்வி அமைச்சு ஆக்கப்பூர்வமாக களம் இறங்க வேண்டும்.

கல்வியாலர்கள்,உலகளாவிய கல்வி சிந்தனையாளர்களோடு கலந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளை அறிக்கை தயார்செய்து அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற விவாத்தில் நாட்டின்  எதிர்காலக் கல்வியை நிர்ணயம் செய்யப்போகும் அந்த வெள்ளை அறிக்கை முதன்மையான விவாதமாக எடுத்து கொள்ளவும் வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset