நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் வெற்றி வாகை சூடினார் 

மெல்பர்ன்:

இவ்வாண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்'போட்டியான ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 3-ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் தர வரிசையில் 44-ஆம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார். 

இதையடுத்து சின்னர் 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ஜானிக் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset