நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசிய கிண்ண காலிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தஜிகிஸ்தான் அணிகள் முன்னேற்றம் 

டோஹா: 

2023ஆம் ஆண்டுக்கான ஏ.எப்.சி ஆசிய கிண்ண போட்டி கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நேற்றிரவு நடைபெற்ற சுற்று 16க்கான ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, தஜிகிஸ்தான் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின. 

ஆஸ்திரேலியா இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இவ்வாட்டத்தில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது. 

மற்றொரு ஆட்டத்தில் தஜிகிஸ்தான் - ஐக்கிய அரபு சிற்றரசு அணிகள் மோதின. 1-1 என்று சமநிலையில் விளையாட்டு தொடர்ந்ததால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டி வரை சென்றது. 

பெனால்டியில் தஜிகிஸ்தான் அணி 5-3 என்ற பினால்டி கோல் வாயிலாக ஐக்கிய அரபு சிற்றரசை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset