நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

ரோட்னி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நியூபோர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் நியூபோர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை புருனோ பெர்னாண்டஸ், அந்தோனி, மைனோ, ஹிஜ்லாவ்ண்ட் ஆகியோர் அடித்தனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சௌத்ஹாம்டன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset