நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து எஃப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி உட்பட பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.

லண்டனில் நடைபெற்ற 4ஆவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தில் 88ஆவது நிமிடத்தில் அகே அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அஸ்டன் வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset