நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆக்சிஜன் வசதி இல்லாமல், ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 விமானங்கள்: ரூ.1.10 கோடி அபராதம்

புது டெல்லி:

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ  ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.

டிஜிசிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவசர காலங்களின்போது விமானப் பணிக் குழுவினர் மற்றும் பயணிகளுக்கு வழங்க தேவையான ஆக்சிஜன் வசதி இல்லாமல், ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 விமானங்கள் இயக்கப்படுகின்றன என்று புகார் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டபோது அந்த விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது உண்மை என்று கண்டறியப்பட்டது.

இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset